குழந்தைப் பாடல்
(இசையரசு)
நான்வளர்த்த பச்சைக் கிளி
நன்றாய் சீட்டி அடித்தது
‘அக்கா, அம்மா’ சொன்னது –அது
‘அக்கா, அம்மா’ சொன்னது –அது
அனைவ ருக்கும் பிடித்தது.
ஆண்டு ஒன்று சென்றது -அது
அனைவ
ருடனும் பேசியது.
அப்பா தங்கை தம்பி எல்லாம்-தம்
அகம் மகிழ்ந்து கொண்டாரே.
‘எத்தனை மொழி கிளி அறியும்?’ –என
ஒரு நாள் அப்பா கேட்டாரே
‘ஒருமொழி’ என்று சொன்னதும்-அவர்
உடல் குலுங்க சிரித்தாரே
‘பறவை பேசும் மொழியுடனே -இது
பைந்தமிழும் அறியும் என்றார்
தம்பி உனக்கு எத்தனை?’-என்னிடம்
அவரும் கேட்டாரே
‘தாய்மொழி தமிழை நான் அறிவேன்’ -
தயங்கி தயங்கி நான் சொல்ல -அவர்
கலகலவெனவே சிரித்தாரே -நான்
உளம் கலங்கிப் போனேனே
பறவையை விடவும் மேலான
மனிதனான நான் உலகில்
பத்து மொழியை படித்தாலும்-ஒரு
பாதகம் இல்லை என அறிந்தேன்
No comments:
Post a Comment