Tuesday, 18 December 2012

..விடுவிக்க முயலுங்கள்


நான் யார்?
பேருந்திலும் செல்வேன்,பெரிய விமானத்திலும் பறப்பேன்
உலகமெலாம் சுற்றினாலும் ஒருமூலையில் தான் இருப்பேன்...

மேலேயும் ஓட்டை கிழேயும் ஓட்டை ,இடப்பக்கம் ஓட்டை வலப்பக்கம் ஓட்டை.ஆனால் நீரைச் சுமப்பேன்.....

உணவைக் கொடுங்கள்;உண்பேன் உண்பேன்.உண்டு கொண்டே இருப்பேன் ;நீரைக் கொடுங்கள், நிமிடத்தில் இறப்பேன்....
.
கத்தியால் என்னைக் கண்ட துண்டமாய் வெட்டுகிறாய். கண் ணீர் விட்டும அழுகிறாய்....

கூட்டி வருவார் யாரும் இல்லை;ஆனால் கூட்டமாய் இருப் பேன்.என்னைக் களவு செய்வார் யாரும் இல்லை.ஆனால் காணாமல் போவேன் காலையில் ....

விடையைத் தேர்வு செய்க : நெருப்பு,ஸ்பாஞ்சு,வெங்காயம்,விண்மீன்,அஞ்சல்தலை    

1 comment: