Tuesday, 25 December 2012

சிரிப்போ சிரிப்பு


இதழ் பிரியட்டும்! இளநகை தெரியட்டும்!
*ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில் வீக்கா இருக்கான்.
தந்தை: தமிழ்ல?
ஆசிரியர் பலவீனமாய் இருக்கான்
* டாக்டர், வயிற்றுவலி! என்னால பொறுக்க முடியல..
வயிறு வலிக்கும்போது நீங்க ஏன் பொறுக்க போனீங்க?
*அவன் வித்தியாசமான பக்தன் என்று எப்படிச் சொல்ற ?
திருப்பதிக்கு மொட்டைக் கடுதாசி போடுறேன்னு வேண்டிக்கிட்டானாம்.
*நீங்க தானே தமிழ்ச்  செல்வன்?
ஆமாங்க..
உங்க பேர்ல கணக்கு இருக்கா?
கணக்கு இல்லைங்க , தமிழ் தான் இருக்கு.
*அந்தரத்துல பறக்க வைப்பேன் என்று சொல்லி பல லட்சம் வசூலித்த ஆனந்த சாமி என்ன ஆனார்?
விமானத்தில் ஏறி வெளி நாட்டுக்கு பறநதிட்டாராம்.
(நன்றி கிழக்கு கடற்கரை ராகம்)








;



  




No comments:

Post a Comment