Sunday, 3 February 2013

jokes/2


இதழ் பிரியட்டும்,இளநகை தெரியட்டும்.2
*பெரியவர்:படிக்கட்டுல தொங்குற தம்பிகளா, உள்ளே வாங்கப்பா.
மாணவர்கள் :ஏன் பெரிசு?
பெரியவர் :பஸ்சுக்குள் நாம் ஏறினாலும், நம்ம மேல் பஸ் ஏறினாலும் டிக்கெட் வாங்கப் போறது என்னவோ நாமதானே.
*பணம் எடுக்க வந்தவர் ஏன் கீழே விழுந்திட்டார்?
அவரிடம் பேலன்ஸ் இல்லையாம்.
*கணவர் :சே எப்ப பார்த்தாலும் மாமியாரை திட்டிகிட்டே இருக்கியே. ஏண்டி?
மனைவி:நான் உங்க மாமியாரையா திட்டறேன்;என் மாமியாரைத்தானே திட்டறேன்.
*தலைவருக்கு கணக்கு பார்க்கவே தெரியாது. அவரைப்போய் கணக்கு புலிங்கிறியே
புலிக்கு மட்டும் கணக்கு தெரியுமாக்கும்.
*குரைக்கிற நாய் கடிக்காது. ஏன் தெரியுமா?
ஏன் தெரியலியே.
ஏன்னா, ஒரே நேரத்தில இரண்டு வேலைகளைச் செய்யமுடியாதுல்ல,அதனாலதான்.
நன்றி :கி.க.ராகம் 

Sunday, 13 January 2013


.

 இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள்      






Tuesday, 25 December 2012

சிரிப்போ சிரிப்பு


இதழ் பிரியட்டும்! இளநகை தெரியட்டும்!
*ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில் வீக்கா இருக்கான்.
தந்தை: தமிழ்ல?
ஆசிரியர் பலவீனமாய் இருக்கான்
* டாக்டர், வயிற்றுவலி! என்னால பொறுக்க முடியல..
வயிறு வலிக்கும்போது நீங்க ஏன் பொறுக்க போனீங்க?
*அவன் வித்தியாசமான பக்தன் என்று எப்படிச் சொல்ற ?
திருப்பதிக்கு மொட்டைக் கடுதாசி போடுறேன்னு வேண்டிக்கிட்டானாம்.
*நீங்க தானே தமிழ்ச்  செல்வன்?
ஆமாங்க..
உங்க பேர்ல கணக்கு இருக்கா?
கணக்கு இல்லைங்க , தமிழ் தான் இருக்கு.
*அந்தரத்துல பறக்க வைப்பேன் என்று சொல்லி பல லட்சம் வசூலித்த ஆனந்த சாமி என்ன ஆனார்?
விமானத்தில் ஏறி வெளி நாட்டுக்கு பறநதிட்டாராம்.
(நன்றி கிழக்கு கடற்கரை ராகம்)








;



  




JOKES


Tuesday, 18 December 2012

..விடுவிக்க முயலுங்கள்


நான் யார்?
பேருந்திலும் செல்வேன்,பெரிய விமானத்திலும் பறப்பேன்
உலகமெலாம் சுற்றினாலும் ஒருமூலையில் தான் இருப்பேன்...

மேலேயும் ஓட்டை கிழேயும் ஓட்டை ,இடப்பக்கம் ஓட்டை வலப்பக்கம் ஓட்டை.ஆனால் நீரைச் சுமப்பேன்.....

உணவைக் கொடுங்கள்;உண்பேன் உண்பேன்.உண்டு கொண்டே இருப்பேன் ;நீரைக் கொடுங்கள், நிமிடத்தில் இறப்பேன்....
.
கத்தியால் என்னைக் கண்ட துண்டமாய் வெட்டுகிறாய். கண் ணீர் விட்டும அழுகிறாய்....

கூட்டி வருவார் யாரும் இல்லை;ஆனால் கூட்டமாய் இருப் பேன்.என்னைக் களவு செய்வார் யாரும் இல்லை.ஆனால் காணாமல் போவேன் காலையில் ....

விடையைத் தேர்வு செய்க : நெருப்பு,ஸ்பாஞ்சு,வெங்காயம்,விண்மீன்,அஞ்சல்தலை    

Sunday, 16 December 2012

வரவேற்கப்படுகின்றன........

குழந்தைகளின் படைப்புகள் மகிழ்வுடன் வரவேற்கப்படு கின்றன.; அனுப்ப வேண்டிய முகவரி:lourdusraj@ymail.com